கைது செய்யப்படுவாரா முருகதாஸ்? உயர்நீதிமன்றம் சென்றது ஏன்?

விஜய் நடிப்பில் வெளியாக பல சர்ச்சைகளை சந்தித்து வரும் திரைப்படம் சர்கார்.

தமிழக அரசியல் பிரமுகர்கள் குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிராக கூடியுள்ளனர். பிரச்சனை பெரிதாக ஆனதால் ஒரு சில காட்சி நீக்கப்பட்டுள்ளது.

நேற்று முருகதாஸ் கைது செய்யப்பட இருப்பதாக தகவல் ஒன்று வெளியானது. ஆனால் அது வதந்தி.

இந்நிலையில் தனது வழக்கறிஞர்களுடன் சென்னை உயர்நீதிமன்றம் சென்று தனக்கு முன் ஜாமின் வழங்கவேண்டும் என்றும் அதை அவசர வழக்காக விசாரிக்கும்படியும் மனு தாக்கல் செய்துள்ளார்.

தற்போது இயக்குனர் முருகதாஸை நவம்பர் 27 ம் திகதி வரை கைது செய்யும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]