கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரும் எதிர்வரும் 20 திகதி வரை விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரும் எதிர்வரும் 20 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் 10 இந்திய மீனவர்கள், இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இந்திய மீனவர்கள் விசைப்படகில் நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரும் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு, ஊர்காவற்துறை பதில் நீதவான் ஜோய் மகிழ் மகாதேவன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது ஊர்காவற்துறை பதில் நீதவான் குறித்த 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]