பைசிக்கிள் திருட்டில் ஈடுபட்டுவந்த வாலிபர் 30 வரை விளக்கமறியலில்….

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பிரதேசத்தில் பைசிக்கிள் திருட்டில் ஈடுபட்டுவந்த வாழைச்சேனையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை ஏறாவூர்ப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் எட்டு பைசிக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.

வாழைச்சேனையிலிருந்து பஸ்ஸில் வரும் 29 வயதுடைய இந்த வாலிபர கடந்த சுமார் இரண்டு மாதகாலத்தில் ஏறாவூர்ப்பிரதேசத்திலுள்ள பொது இடங்களில் பைசிக்கிள்களை திருடிச்சென்று வாழைச்சேனையில் சில பைசிக்கிள்களை விற்பனை செய்துள்ளார்.

இன்னும் சில பைசிக்கிள்களை அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது.

இவர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 30 ஆந்திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்பிஜிஜிஎஸ். சத்துரங்க தெரிவித்தார்..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]