கே.வி.ஆனந்த் – விஜய்சேதுபதியின் ‘கவண்’ ரிலீஸ் திகதி எப்போது?

  • கே.வி.ஆனந்த் – விஜய்சேதுபதியின் ‘கவண்’ ரிலீஸ் திகதி எப்போது? 

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கவண்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

‘மாற்றான்’, ‘அனேகன்’ படங்களின் வெற்றிக்கு பின்னர் ஏஜிஎஸ் நிறுவனமும் கே.வி.ஆனந்தும்  இணைந்துள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியும் டி.ராஜேந்தரும் முதன் முதலில்  இணைந்ததால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் திகதி  குறித்த தகவல் படக்குழுவினர்களின் நெருக்கமானவர்களிடம் இருந்து தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் மார்ச் இறுதி வாரத்தில் வெளியாகும் என்றும் சரியான திகதி  இன்னும் ஒருசில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மெடோனா செபஸ்டியன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த், தமிழரசன், ஜெகன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கெரக்டர்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹொப் தமிழா ஆதி இசையில், அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.