பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும் கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகையுமான கே.ஆர். இந்திரா இன்று காலமானார்

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும் , டப்பிங் ஆர்டிஸ்ட் ஜெய கீதாவின் தாயாரும் கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகையுமான  கே.ஆர்.இந்திரா ​வயது ​-  65 இன்று காலமானார். இவர் கொஞ்சும் குமாரி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே படத்தில் தான் பழம்பெரும் நடிகையான மனோரமாவும் அறிமுகமானார்கள்.

கே.ஆர். இந்திரா

இவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த “ பெற்றால் தான் பிள்ளையா  “ நடிகர் நம்பியாருக்கு ஜோடியாக படத்தில் நடித்தார். ஹலோ Mr.ஜமீன்தார் படத்தில் M.R.ராதாவுக்கு ஜோடியாக நடித்த அனுராதா மேலும் கந்தன் கருணை , சிந்து பைரவி , சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடித்த “ மன்னன் “ , “ பணக்காரன் “ போன்ற 250-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கடைசி படம் “ கிரிவலம் “ , இப்படத்தில் இவர் நடிகர் ரிச்சர்டின் பாட்டியாக நடித்துள்ளார்.இவருடைய தந்தை கே. எஸ். ராமசாமி பிரபல கர்நாடக பாடகர் மற்றும் நாடக நடிகர். நடிகர் சங்க உறுப்பினரான கே.ஆர். இந்திரா அவர்களின் வீட்டிற்கு நடிகர் சங்கம் சார்பாக நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் , துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா, ஹேமச்சந்திரன் ஆகியோர் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அன்னாருடைய இறுதிசடங்கு நாளை மதியம் 3 மணிக்கு நடைபெறும்.

முகவரி :M.no.86
Name K.R.Indira
Old no.6, New No.8A, Chokkalingam Nagar,
Vellala Teynampet.
Ph : 9380012226

கே.ஆர். இந்திரா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]