கோத்தாபய கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு நீட்டிப்பு

கோத்தாபய கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு நீட்டிப்பு

கோத்தாபயபொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த சட்ட நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவினை டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலை தொடர்பில் பொது உடமை சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாகவும், குறித்த விடயம் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் என்பதால் விசாரணைகளைத் தற்காலிகமாக கைவிடுமாறு கோத்தாபய ராஜபக்ஷவினால் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கெதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதன்படி குறித்த வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதி எல்.டீ.பி.தெஹிதெனிய மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]