கோட்டாபய ராஜபக்ஷவை கைதுசெய்ய தடை நீடிப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 03ஆம் திகதி வரை கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவொன்றை இன்று பிறப்பித்துள்ளது.

எனினும், அவருக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இந்த தடை உத்தரவு இடையூறாக இருக்காது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய, டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]