கேள்விக்குறியான யாஷிகாவின் காதல்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஆரவ் மற்றும் ஓவியா காதலை போன்று பிக்பாஸ் 2வது சீசனில் காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள் மஹத்-யாஷிகா.

மகத்திற்கு வெளியில் ஒரு காதலி இருக்கும் நிலையில், யாஷிகா உடனான காதல் என்னாகும் என்று அனைவராலும் பேசப்பட்டது.

இந்நிலையில், ஞாயிறு அன்று நடந்த எலிமினேஷனால் மஹத்-யாஷிகா காதல் முடிவிற்கு வரப்பட்டுள்ளது.

மஹத் வெளியேற்றப்பட்ட பிறகு யாஷிகா ஸ்மோக்கிங் ரூமில் கதவை மூடிக்கொண்டு கதறி கதறி நீண்ட நேரம் அழுதார். அதன் பின் மஹத்தை வீட்டின் உள் இருக்கும் போட்டியாளர்களுடன் பேசவைத்தார் கமல்.

அப்போது பேசிய யாஷிகா ‘நீ ரொம்ப நல்லவன்.. ஐ மிஸ் யூ.. பிராச்சியையும் மிஸ் பண்ணதா சொல்லு.. ஐ லவ் யு’ என கூறினார்.
இவர் இப்படி கூறியது, இனி மஹத் பிராச்சியுடன் சேரப்போகிறார் என யாஷிகா முடிவெடுத்தது போலவே தெரிவதாக காட்டப்பட்டது.

மேலும் ஜனனி உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களும் ‘நீ முதலில் போய் பிராச்சியை பாரு’ என்று தான் சொல்லி அனுப்பி வைத்தனர்.

எனவே பிக்பாஸ் 2வது சீசனில் வளர்ந்து வந்த யாஷிகா-மஹத்தின் காதல் இனி என்னவாகும் என்பது போகப்போக தான் தெரியும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]