முகப்பு Cinema கேரள வெள்ளத்தில் மூழ்கியுள்ள பிரபல நடிகையின் வீடு- வீடியோ உள்ளே

கேரள வெள்ளத்தில் மூழ்கியுள்ள பிரபல நடிகையின் வீடு- வீடியோ உள்ளே

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி ஆரம்பித்த மழை, விடாமல் பல நாள்கள் பெய்ததால், மத்திய – வட கேரளப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகிறது.26 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுக் கொள்ளளவை எட்டிய இடுக்கி அணை திறக்கப்பட்டது. தொடர்ந்து பொழிந்து வரும் கன மழையின் வெள்ள பெருக்காலும், மண் சரிவாலும் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.ஆயிரன கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள கன மழை காரணமாக பிரபல நடிகை அனன்யாவின் வீடும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் முகநூல் பக்கத்தில் நேரலையில் வந்த பதிவிட்ட நடிகை அனன்யா ‘கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை பெரும்பவூரில் உள்ள எங்களது வீடுகளில் பத்திரமாக இருந்து வந்தோம். கடந்த 2 நாட்களாக நிலைமை மோசமானதால். மழை நீரின் மட்டம் அதிகமாகி வீட்டினுள் தண்ணீர் புகுந்துவிட்டது.

எங்களுடைய உறவினர்களும் மழை நீர் புகுந்த வீட்டினுள் தான் இருந்து வந்தனர்.ஆனால், தற்போது பெரும்பவூரில் உள்ள என்னுடைய தோழி ஆஷாவின் வீட்டில் பத்திரமாக இருக்கிறோம். எங்களை விட மோசமான நிலையில் பல மக்கள் இருக்கிறார்கள் என்று தெரியும். இந்த நேரத்தில் எங்களுக்கு உதவி செய்ய முன்வந்த அனைவருக்கும் நன்றி’ என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com