கேரள மக்களுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரணப் பொருட்களை வழங்கும் விஜய்

கேரள மக்களுக்கு ரசிகர்கள் மூலம் உதவ நிவாரணப் பொருட்களை தளபதி விஜய் வழங்கியுள்ளார்.

மழை வெள்ளத்தால் கேரள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது ரசிகர்கள் மூலம் நடிகர் விஜய் ரூ.45 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளார்.

இதன்படி நடிகர் விஜய் தனது ரசிகர்மன்ற பொறுப்பாளர்கள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கினார். இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த தனது ரசிகர்மன்ற 15 மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தலா ரூ.3 லட்சம் அனுப்பினார்.

இந்தப் பணத்தைக் கொண்டு முகாமில் தஞ்சமடைந்தவர்களுக்கும் மற்றும் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான நிவாரண பொருட்களை வாங்கித் தருமாறு கூறியுள்ளார்.

இந்த நிவாரண பொருட்கள் தமிழ்நாட்டில் 15 மாவட்டத்திலிருந்து 15 லாரிகள் மூலமாக கேரளாவில் பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்திற்கு ரசிகர் மன்ற நிர்வாகிகளால் நேரடியாக வழங்கப்படுகிறது.

கேரளாவில் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்குக்கும், விஜய் நிதி அனுப்பியுள்ளார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் கேரள வெள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட்டு அங்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு, உதவிகளையும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

வரி விலக்கு பெறுவதற்காக பிரபலங்கள் வெள்ள நிவாரண நிதியை அரசிடம் முறைப்படி வழங்கி வருகிறார்கள். ஆனால் அதை விரும்பாத விஜய் நேரடியாக ரசிகர்களுக்கு அனுப்பி அவர்கள் மூலம் உதவுவது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]