கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட இருவர் கைது!

எழுபத்தைந்து கிலோ கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட இருவர் யாழ் வட்டுக்கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

வட்டுக்கோட்டை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவழைப்பில் யாழ் பண்ணாகம் சுழிபுரம் வீதியில் வைத்து இன்று அதிகாலை இந்த இருவர் செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து எழுபத்தைந்து கிலோ கேரள கஞ்சாவையும் பொலிசார் மீட்டுள்ளனர்

யாழ் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 55 மற்றும் 52 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்

முப்பத்தி இரண்டு சிறிய பொதிகளில் அடைக்கப்பட்டு இந்த கஞ்சா கடத்திச்செல்லப்பட்டிருந்தது

குறித்த கஞ்சாவினை விற்பனை செய்யும்நோக்கில் வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்

அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]