கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது

கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட விநாயகர்புரம் பகுதியில் வைத்து நேற்றையதினம் 16.770 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 5 பேர் கொண்ட குழுவினரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஸ பெறமுண தெரிவித்தனர்

வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஸ பெறமுண, ஜே.ஏ.எஸ்.ஏ. ஜெயசிங்க, ஏ.சிவதர்சன் கொண்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட இரகசிய தேடலின்போது கைது செய்துள்ளனர்

குறித்த கஞ்சா கடத்தும் குழுவின் பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.மகேந்திரன் மற்றும் அம்பாரைப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் பகுதியில் கடமையாற்றும் இராணுவ அதிகாரி. 1 பெண் உட்பட 5 பேர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, அம்பாரை, அனுராதபுரம் போன்ற பகுதியைச் சேர்ந்தவர்கள்.

பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட தமிழர் என்பதுடன் ஏனைய 4 பேரும் சிங்களவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த சம்பத்துடன் தொடர்புடைய இரண்டு வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன் அதில் ஒரு வாகனம் ஓட்டமாவடியைச் சேர்ந்த வாகனம் வாடகைக்கு விடப்படும் ஒரு உரிமையாளருக்குச் சொந்தமானது என்பது குறிப்படதக்கது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]