கேரளாவில் வசூல் குவிக்கும் நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’

நயன்தாரா நடிப்பில் வெளிவந்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம்.

அந்தவகையில், இப்படம் தமிழகம் மட்டுமன்றி கேரளாவிலும் அதிகப்படியான வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி கேரளாவில் ‘இமைக்கா நொடிகள்’ 3 நாட்களில் ரூ 1.8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இப்படத்தை வாங்கியதே அங்கு ரூ 65 லட்சத்திற்கு தான் என கூறப்படுகின்றது.

ஆனால் கேரளாவில், 3 நாட்களில் விநியோகஸ்தர்கள் ஷேர் மட்டும் ரூ 75 லட்சம் கிடைத்துள்ளதாகவும், 3 நாட்களிலேயே ரூ 10 லட்சம் லாபம் வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனவே இப்படம் கேரளாவில் விநியோகஸ்தர்கள் ஷேர் ரூ 1.2 கோடி வரை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கேரளாவில் வசூல்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சி.ஜெ.ஜெயக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இமைக்கா நொடிகள்.  இப்படத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கன்னா போன்ற பலர் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளதோடு, புவன் சீனிவாசன் படத்தொகுப்பில் இப்படம் தயாராகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]