முகப்பு News India கேரளாவிற்கான நிவாரணப் பொருட்களுக்கு ஜீ.எஸ்.டி வரி கிடையாது

கேரளாவிற்கான நிவாரணப் பொருட்களுக்கு ஜீ.எஸ்.டி வரி கிடையாது

கேரளாவிற்கான நிவாரணப் பொருட்களுக்கு ஜீ.எஸ்.டி வரி கிடையாது என கூறப்படுள்ளது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து கேரளாவிற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மாநிலங்களிலிருந்து கொண்டுசெல்லப்படும் நிவாரணப் பொருட்கள் மீது, ஜீ.எஸ்.ரி. மற்றும் சுங்கவரி விதிக்கப்பட மாட்டாதென மத்திய அரசு இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

இதையடுத்து திருச்சூர், பாலக்காடு, கொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 3 சுங்கச்சாவடிகளில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.600 கோடியும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ரூ.100 கோடியும் நிதி உதவி அறிவித்ததோடு, மத்திய அரசு ரூ.600 கோடி நிதியை கேரள அரசுக்கு வழங்க முன்வந்துள்ளதாக மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com