கேப்பாப்புலவில் இருக்கும் நிலங்களை மீட்டுத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உறுதிமொழி

கேப்பாப்புலவில்
chndrika kumaratunga

கேப்பாப்புலவில் இருக்கும் நிலங்களை மீட்டுத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உறுதிமொழி. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்களை மீட்டுத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கேப்பாப்புலவில் மக்களின் குழுவிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றது.

அவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி தவிசாளர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரின் செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.