கேப்பாப்புலவில் 279 ஏக்கர் காணி மே 15இற்கு முன்பு விடுவிப்பு

கேப்பாப்புலவில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 279 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார சிறைசாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி இந்த காணிகளை விடுவிப்பத்தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

கேப்பாப்புலவில்

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது கேப்பாபுலவில் காணப்படும் பொது மக்களின் 279 காணியை விடுவிப்பதற்கு பாதுகாப்பு இணக்கம் தெரிவித்தது.

அதன்படி குறித்த 279 ஏக்கர் காணி மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும். 248 ஏக்கர் அரச காணிகள் கேப்பாப்புலவிலிருந்தும் 31 ஏக்கர் தனியார் காணிகள் சீனியாமோட்டையிலிருந்தும் விடுக்கப்படவுள்ளன.

எஞ்சிய காணிகள் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய 5 மில்லியன் ரூபா நிதி மீள்குடியேற்ற அமைச்ச õல் ஒதுக்கப்படும் பட்சத்தில் 189 ஏக்கர் தனியார் காணிகளும் ஒரு மாதகாலத்திற்குள் விடுவிக்கப்படும்.

இதற்கமைய கேப்பாப்புலவிலுள்ள 468 ஏக்கர் காணிகள் முழுமையாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உத்தரவின் கீழ் விடுவிக்கப்படும் என்றும் அவருடைய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]