கேப்பாப்பிலவில் பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் : 108 தேங்காய் உடைத்து அறவழிப் போராட்டம்

கேப்பாப்பிலவில் பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 108 தேங்காய் உடைத்து மக்கள் நேற்று வழிபாட்டுப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

கேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேப்பாப்பிலவில் பூர்வீகக்

கேப்பாப்பிலவில் 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணியை விடுவிக்கக் கோரி மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாதுகாப்புத் தலைமையகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடந்து வருகின்றது. 55ஆவது நாட்களைக் கடந்தும் இந்தப் போராட்டம் தொடர்கின்றது.

கேப்பாப்பிலவில் பூர்வீகக்

தங்கள் போராட்டத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் அமைதி வழியிலான பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்றுமுன்தினம் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டதுடன் 108 தேங்காய்களையும் உடைத்தனர். இந்தப் போராட்டத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனும் கலந்துகொண்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]