கேப்பாபுலவில் எதிர்வரும் 28ஆம் திகதி பொதுமக்களின் 132 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது

கேப்பாபுலவில் எதிர்வரும் 28ஆம் திகதி பொதுமக்களின் 132 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது

முல்லைத்தீவு கேப்பாபுலவில் பொதுமக்களின் 132 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி குறித்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கேப்பாபுலவு மக்கள் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு ஆரம்பித்த போராட்டம் இன்று 289வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் அவர்களது காணியின் 132 ஏக்கர் காணிகள் எதிர்வரும் 28ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]