300ஆவது நாளை எட்டும் கேப்பாபிலவு போராட்டம்

கேப்பாபிலவு போராட்டம் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் 299ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்படுகின்றது.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி, கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இந்த மக்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சுமார் 10 மாதங்கள் நிறைவுபெறவுள்ள நிலையில் தமது கோரிக்கைக்கு உரிய தீர்வை பெற்றுத் தருமாறு இந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் ஆரம்பித்து நாளைய தினம் 300ஆவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]