கேன்சர் நோயாளிகளுக்கு தலைமுடி தானம் செய்த பிரபல சீரியல் நடிகை!!

கேன்சர் நோயாளிகளுக்கு விக் செய்வதற்கு நடிகர் கணேஷ் வெங்கட்ராமனின் மனைவி நிஷா தலைமுடி தானம் செய்துள்ளார்.

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சையால் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தலைமுடி உதிர்ந்துவிடுகிறது. அவர்களுக்கு விக் செய்துகொள்வதற்காக பிரபலங்கள் சிலர் தங்கள் தலைமுடியை அவ்வப்போது தானம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகை ஓவியாவும் தனது தலைமுடியை இதற்காக தானம் செய்திருந்தார்.

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் ‘அபியும் நானும்’, ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘தொடரி’, ‘நாயகி’, ‘இணைய தளம்3 போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிவரை போராடியவர். இவர் டி.வியில் நடித்து வந்த நடிகை நிஷா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். நிஷா தற்போது தனது தலைமுடியின் ஒரு பகுதியை கேன்சர் நோயாளிகளுக்காக தானம் கொடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது இணைய தள பக்கத்தில் கூறும்போது, ‘‘தலைமுடியை கேன்சர் நோயாளிகளுக்கு கொடுக்கும் ஒரு நல்ல விஷயம் செய்துள்ளேன். எனது தலைமுடி யாரோ ஒருவருக்கு விக் ஆக மாறுவதில் எனக்கு மகிழ்ச்சி’’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]