கெளதம் மேனனின் ‘தோட்டா’ இரகசியம் வெளிவந்துள்ளது

கெளதம் மேனனின் ‘தோட்டா’  இரகசியம் வெளிவந்துள்ளது.

பிரபல இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படபிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால் இந்த டீசரில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற தகவல் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரீஸ் ஜெயராஜ் என ரசிகர்கள் ஊகம் செய்து கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் பெயரை இந்த படத்தின் இசை  வெளியீட்டில் வெளியிட கவுதம் மேனன் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளரின் ரகசியம் வெளிவந்துள்ளது. சசிகுமாரின் ‘கிடாரி’, ‘பலே வெள்ளைத்தேவா’ போன்ற படங்களுக்கு இசையமைத்த தர்புகா சிவா தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தனுஷ், மேக்னா ஆகாஷ், ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. ஜோன் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.