கென்யா தலைநகரிலுள்ள பள்ளியில் தீ விபத்து – 7 மாணவிகள் பலி

கென்யா தலைநகரான நைரோபி எனும் பிரதேசத்தில் மோய் பெண்கள் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பிரசித்தி பெற்ற இப்பள்ளியில் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் மாணவிகள் பள்ளிக்கு புறப்படத் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் மாணவிகள் தங்கியிருந்த அறையொன்றில் தீ விபத்து ஏற்பட்டது.கென்யா

தகவல் அறிந்த தீயணைப்புத் துறை மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 7 மாணவிகள் உடல் கருகி பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கக்கப்பட்டுள்ளனர்.

கல்வித்துறை மந்திரி பார்வையிட்டார், அவர் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்தார். மேலும், தீவிபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.கென்யா

இத் தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைகள் நடைபெற்று வருவதால் பள்ளி காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நாடு முழுவதுமுள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தீ வைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத்தான் இப் பள்ளிக்கும் யாராவது தீ வைத்திருக்கலாம் கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]