கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை

கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை

திருகோணமலை பாலையூற்று எனும் பிரதேசத்தில் நேற்றைய தினம் (5) அதிகாலையில் கூறிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை படுகொலை செய்துள்ளார். தனது மனைவியை கத்திரிகோலால் தாக்கிக் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குடும்ப தகராரின் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]