கூரிய கத்தியுடன் ஐ.தே.கட்சியின் உறுப்பினர் பாலித தேவப்பெரும – நாடாளுமன்றில் நடந்தது என்ன?? புகைப்படங்கள் உள்ளே

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலைமைக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவே பொறுப்பு கூற வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், சபாநாயகர் ஆசனத்தில் இருந்து எழுந்து செல்லாத காரணத்தினாலேயே நாடாளுமன்றத்தில் பதற்றமும் அமளியும் ஏற்பட்டது.

சபாநாயகர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விட்டு எழுந்து சென்றிருந்தால், இப்படியான நிலைமை ஏற்பட்டிருக்காது.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும கத்தியுடன் ஆவேசமாக பாயும் காட்சிகள் அங்குள்ள கமராவில் சிக்கியுள்ளது.

கூரிய கத்தியுடன் கூரிய கத்தியுடன் கூரிய கத்தியுடன் கூரிய கத்தியுடன் கூரிய கத்தியுடன்

எது எப்படி இருந்த போதிலும் பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நடத்த மகிந்த ராஜபக்ச தரப்பினர் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமை காரணமாக சபையில் அமளியும் பதற்றமும் ஏற்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]