கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் படுகொலை; ஒருவர் கைது

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கிரிந்திவெல பகுதியில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் வேயங்கொட, புளத்வெல்தெனிய பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான 20 வயதுடைய இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரை பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]