கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் படுகொலை

நிட்டம்புவ, எல்லக்கல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர், வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பனாவல, தும்மலகொட பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வலப்பனை, திம்புட்டுகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (10) மாலை ஒருவர் உயிரிழந்துள்ளார்

வடபே, திம்புட்டுகொட பகுதியைச்சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கொலை சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]