கூட்டு நிறுவனமாக இணையும் உலகின் பிரபல கண் கண்ணாடி நிறுவனங்கள்

உலகின் மிகப்பெரிய கண் கண்ணாடி உற்பத்தி நிறுவனம் ஒன்று, தன்னுடைய போட்டி கண் கண்ணாடி நிறுவனம் ஒன்றுடன் ஒன்றிணைய ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த இணைப்பானது மூலம் சுமார் 50 பில்லியன் டாலர்கள் சந்தை மதிப்புள்ள ஒரு நிறுவனத்தை உருவாக்குவதோடு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பையும் உருவாக்க இருக்கிறது.

luxotica

ரே பேன் மற்றும் ஓக்லே ஆகிய நிறுவனங்களை கொண்டுள்ள லக்சோட்டிகா என்ற இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமானது பிரெஞ்சு லென்ஸ் உற்பத்தி செய்யும் எஸ்ஸிலோர் நிறுவனத்துடன் இணைய உள்ளது.

இந்த கூட்டு நிறுவனமானது கண் கண்ணாடி லென்ஸ்கள் மற்றும் பிரேம்களை உருவாக்க உள்ளது.
நன்றி : பிபிசி தமிழ்