கூட்டு ஒப்பந்த விதிமுறை மீறல் ஹட்டனில் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

கூட்டு ஒப்பந்த விதிமுறை மீறல் தொடர்பிலும்  தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் 2017ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமை பற்றியும்  தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஜே.வி.பியின் அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கம் இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை ஹட்டன் நகரில் மக்களுக்குத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கியிருந்தது.

இரண்டு வருடம் ஒப்பந்தக்காலம் என்ற ரீதியிலேயே புதிய சம்பள ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்படி 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய சம்பளக் கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டு கடைசியில் 19 மாதங்களின் பின்னர் புதிய சம்பள திட்டம் ஒன்றிற்காக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதால் கூட்டு ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட இரண்டு வருடத்திற்கு ஒருமுறை புதிய ஒப்பந்தம் என்ற சரத்து வலுவற்றுப் போயுள்ளது. இதனால் 2019 ஆம் ஆண்டுவரை தற்போதுள்ள சம்பளத்துடன் வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

ஆதலால், இம்மாத இறுதிக்குள் புதிய சம்பளத் திட்டம் ஒன்றிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு மக்களை விழிப்புணர்வு அடையச் செய்ய இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதன்போது தெரிவித்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]