கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி தலையிடவேண்டும் – உணவுத் தவிர்ப்பு போராட்டம்

தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் ஜனாதிபதி தலையிட வேண்டும் என கோரி முன்னெடுக்கப்படும் உணவுத் தவிர்ப்பு போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது.

அக்கரப்பத்தனை – வேவர்லி தோட்டத்தில் இரண்டு தொழிலாளர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

அவர்களால் தோட்ட நிர்வாகங்கள் தேயிலை மலைகளை முறையாக பராமரிக்காமை, தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்கப்படாமை உள்ளிட்ட 15 விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனை ஆதரித்து அந்த பகுதியில் உள்ள தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தொழில் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]