கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு: ஒரு வருடத்துக்கு பின்னர் தொழிலாளர்கள் கைது

கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு: ஒரு வருடத்துக்கு பின்னர் தொழிலாளர்கள் கைது

தொழிலாளர்கள் கைது

கூட்டு ஒப்பந்த காலத்தில் பொகவந்தாலாவை – ஹட்டன் பிரதான வீதியில் போரட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 5 பேரை இன்று நோர்வுட்  பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பள உயர்வு கோரி கடந்த கூட்டு ஒப்பந்த காலத்தில் மலையகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இப்போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் மலையகம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டதுடன், பொகவந்தாலவை – ஹட்டன் பிரதான வீதியை மறைத்து சுமர் 3 மணித்தியாலங்கள் சென்ஜோன் டிலரி மக்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

2016 ஆண்டுக்காலப் பகுதியில் இப்போராட்டம் நடைபெற்றதுடன், ஒரு வருடம்  கடந்த நிலையில், குறித்த போரட்டத்தை ஏற்பாடு செய்திருந்த 5 தோட்ட தொழிலாளர்களை நோர்வுட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 தோட்ட தொழிலாளர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]