கூட்டு எதிரணி புதிய அரசமைப்பை நாசமாக்க முற்படுகிறது

அதிகாரம் மீதுள்ள பேராசையின் காரணமாக கூட்டு எதிரணி புதிய அரசமைப்பை நாசமாக முற்படுவதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
புதிய அரசமைப்புகான தேசிய இயக்கம் ஹெரன பிரதேச்திதல் “புதிய அரசமைப்புக்காக அனைவரும் கைக்கோர்ப்போம்” என்ற தொனிப்பொருளில் நேற்றுமுன்தினம் ஒழுங்குச் செய்திருந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ள சூழலில் புதிய அரசமைப்பு பற்றி பேசுவதாக மக்களுக்கு சில கேள்விகள் இருக்கலாம். நாடொன்றை கட்டியெழுப்புவது ஒரு கடினமான விடயம். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றுதல், தேர்தல் முறையை மாற்றுதல் தேசியப் பிரச்சினைக்கு தீர்வை முன்வைத்தல் என்ற அடிப்படையில் புதிய அரசமைப்புகானப் பணிகள் இடம்பெறுகின்றன.

நாட்டில் இனம் மற்றும் மதங்களுக்கு இடையில் வன்முறைகளைத் தூண்டிவிடும் ஒரு தரப்பும் உள்ளது. நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியதாவது, ஒருசில நாடுகளில் இனம், மத என்ற பாரட்சம் பார்ப்பதில்லை. சர்வதேசம் சுதந்திரத்திற்கு பாரிய ஆதரவைக் கொடுக்கும்.

1978ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்தனவால் கொண்டுவரப்பட்ட ஏகாதிபத்திய அரசமைப்புக்கு அன்றுமுதல் இன்றுவரை எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டே வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி இந்த அரசமைப்பை மாற்ற முற்பட்டிருந்தாலும் பின்னாளில் அவரின் அதிகாரங்களை அதிகரித்துக்கொண்டார்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி நிரைவேற்று அதிகார முறைமையை ஒழிக்க தீர்மானங்கள் எடுத்துள்ளன. ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதிருந்த சந்தர்ப்பத்தை தற்போதைய அரசு மாற்றியுள்ளது. நாடாளுமன்றில் ஜனாதிபதியை விமர்சிக்க முடியும். 19 ஆவது திருத்தச் சட்டம் அதனைச் செய்தது. தற்போது புதிய அரசமைப்புக்கான பணிகள் இடம்பெற்று வரும் சூழலில் அதனை நாசமாக கூட்டு எதிரணியின் செயற்படுகின்றனர்.

தேர்தல் முறையை மாற்றியமைக்காவிடின் தேர்தலுக்காக பாரிய நிதியை செலவழிக்க வேண்டிவரும். சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபர்களுக்கு நாடாளுமன்றத்திற்கு போகமுடியாது. முதலாளிகளே நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவர். இன, மதங்களுக்கு எதிராக கொண்டுசெல்லப்படும் செயற்பாடு நாட்டை பின்நோக்கியே கொண்டுசெல்லும்.

மனிதவுரிமைகளை பாதுகாக்க அனைவரும் உணர்ந்துச் செயற்பட வேண்டும். ஏனைய மதங்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட வேண்டாம். அதிகாரத்தை பெற்றுக்கொள்ள சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள இனவாதத்தை தூண்டிவிடுகின்றனர். அதேபோல் தமிழ், சிங்கள அடிப்படைவாதிகளும் இனவாதத்தை தூண்டிவிடுகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]