கூட்டு எதிரணியின் பொதுவேட்பாளராக பசிலை அறிவிக்குமாறு மஹிந்தவிடம் கோரிக்கை

கூட்டு எதிரணியின் பொதுவேட்பாளராக பசில் ராஜபஷவை அறவிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜனபலய பேரணியை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சில எதிரணியின் உறுப்பினர்கள் சந்தித்துள்ளதாகவும், இதன்போதே மேற்படி அவர்கள் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு எதிர்ப்பு பேரணி பெரியளவில் வெற்றிப்பெறவில்லை எனவும், நாமல் ராஜபக்ஷ சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்ஷவை பொதுவேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து கருத்து தெரிவித்து மஹிந்த ராஜபக்ஷ, கூட்டு எதிரணியில் உள்ள பசில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் சிலரே ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லை. எனினும் இந்த பாரிய மக்கள் கூட்டத்தை கண்டு அரசாங்கம் அச்சமடைந்துள்ளது.

எனவே தற்போது உள்ள சூழ்நிலையில், பொதுவேட்பாளர் யார் என்பதை அவசரமாக அறிவிக்க வேண்டிய தேவை கிடையாது’ என பதிலளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]