கூட்டுறவு சங்கத்தின் வளர்மதி கிளைக்கு கிளைக்குழு நிர்வாக தெரிவை நடாத்த கோரி போராட்டம்

கூட்டுறவு சங்கத்தின் வளர்மதி கிளைக்கு கிளைக்குழு நிர்வாக தெரிவை நடாத்த கோரி போராட்டம்

கூட்டுறவு சங்கத்தின்

வலி.கிழக்கு வடபகுதி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் வளர்மதி கிளைக்கு கிளைக்குழு நிர்வாக தெரிவை நடாத்த கோரி அப்பகுதி மக்கள் வடக்கு மாகாண சபை முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டம் வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே மேற்படி போராட்டம் நடைபெற்றுள்ளது.

கூட்டுறவு சங்கத்தின்

கூட்டுறவு சங்கத்தின்

வலி.கிழக்கு வடபகுதி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத்தால் கடந்த தைமாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற இயக்குனர் சபை கூட்டத்தின் தீர்மானத்தின் மூலம் கிளை அந்தஸ்து வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட வளர்மதி கிளைக்கு இதுவரை கிளைக்குழு நிர்வாகம் தெரிவிதர்கான தேர்தல் நடாத்தப்படவில்லை சங்கத்தின் கிளைக்குழுக்கான தேர்தல் நடைபெறவேண்டிய காலத்தை கடந்து ஐந்து மாதங்களாகியும் வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் தேர்தல் நடாத்துவதற்கு ஏன் தயங்குகின்றார்?

இவ்விடயத்தில் யாழ்.மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளரே பொருத்தப்பாடற்ற காரணங்களை முன்வைத்து எமது கிளைக்கு தேர்தல் நடாத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக நம்பகமாக அறிகின்றோம். கடந்த மேமாதம் ஐந்தாம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் கூட்டுறவு அமைச்சருக்கு இவ்விடயம் தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கிளைக்குழு நிர்வாகம் இன்றி எமது கிளையுடன் நான்கு கிளைகள் இயங்கி வருகின்றன. பதவிக்கு வந்த எந்த நிர்வாகமும் எமது கோரிக்கையை செவிமடுக்கவில்லை. 2014 இல் பதவிக்கு வந்த நிர்வாகமும் அதன் தலைவரும் இக்கிளைகளுக்கு உரிய ஒழுங்கின்படி கிளை அந்தஸ்து வழங்கினார். இதனால் தெரிவு செய்யப்பட்ட இத்தலைவரையும் ஆணையாளர் புதிய தலைவர் ஒருவரை நியமனம் செய்ததன் மூலம் தூக்கி எறிந்துள்ளார்.

எனினும் பின் தங்கிய சமூகத்தை சேர்ந்த மக்களாகிய நாம் நிர்வாக திறனை வளர்த்து புதிய தலைமைகளை உருவாக்குவதற்கு ஒரு ஆரம்ப நிலையமாக கருதக்கூடிய கிளைக்குழு நிர்வாகத்தில் பங்கேற்று கொள்வதற்கு, கிளையினை சிறப்பாக நடாத்துவதற்கும், எமது கிளைக்கு விரைவாக தேர்தல்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]