கூட்டாட்சி தொடர்ந்தும் நிலைக்கும்: ரணில்

தற்போதைய நல்லாட்சி கூட்டு அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்கும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றிரவு நடந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கூட்டு அரசாங்கத்தின் சில உறுப்பினர்களை நாம் இழந்திருக்கிறோம். ஆனால், எஞ்சியுள்ள உறுப்பினர்களுடன் தற்போதைய கூட்டு அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெள்ளிக்கிழமை (06) சந்தித்து ஆராயவுள்ளோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]