கூட்டமைப்பு பலமான கட்சியாக பரிணமிக்க வேண்டும் என்கிறார் சிவி

கூட்டமைப்பு பலமான கட்சியாக பரிணமிக்க வேண்டும் என்கிறார் சிவி

சிவி

அனைவரையும் உள்ளடக்கிய பலமான அரசியல் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிணமிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள ஆசனப் பங்கீட்டு குழப்பங்கள் தொடர்பாக கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“சுயநலம் மேலோங்கும் போது இவ்வாறான பிளவுகள் ஏற்படுவது வழமையானது. அதே சுயநலம் தான் சிலநேரங்களில் அந்த பிளவுகளைச் சரிசெய்யவும் உதவும்.

1949ஆம் ஆண்டு கொள்கை நிமிர்த்தம் தந்தை செல்வா தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியிருந்தார். பிரிந்து சென்ற அவர் புதியதொரு கட்சியைத் தொடங்கினார்.

போர் நிறைவடையும் தறுவாயில் சுயநலக் காரணங்களுக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விட்டு சிலர் வெளியேறினர். பிளவுகள் கொள்கை நிமிர்தமும் ஏற்படக் கூடும். சுயநல காரணங்களுக்காகவும் ஏற்படக் கூடும்.

இன்றைய பிளவுகள் எவ்வாறு ஏற்பட்டுள்ளதென்பதை ஊடகவியலாளர்கள் ஆய்தறிந்து கொள்ளுங்கள். அது அரசியல் அவதானிகளின் வேலை.

என்னைப் பொறுத்தவரையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கைகளை எமது மக்களின் நெடுங்கால பாதுகாப்பிற்கும், அபிவிருத்திக்கும், வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாற்றி, யாவரையும் உள்ளடக்கி ஒற்றுமையுடன் பலமான அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]