கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பலமான அணியாக களமிறங்கும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பலமான அணியாக களமிறங்கும் என்று தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

உள்ளுராட்சித் தேர்தலில் ஆசனப் பங்கீடு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நேற்று மாலை 3 மணிமுதல் இரவு 9 மணி வரை சுமார் 6 மணித்தியாலயங்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. அதன்பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து ஆராயப்பட்டன. 80 சதவீதமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு விடயங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளன. அந்த விடயங்களையும் தீர்மானித்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டைப் பகிரங்கமாக அறிவிப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.