கூட்டமைப்புக்குள் குழப்பம் : சித்தார்த்தன் கவலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி தனது மேலாண்மையை நிலைநாட்டுவதற்காக தொடர்ந்தும் பிழைகளை விட்டுக்கொண்டிருப்பதாக தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே இருக்கிறவர்கள் மத்தியில் பல குழப்பங்கள் உள்ளன. குறிப்பாக மாகாணசபையில் குழப்பம், எங்கோ இருந்த விக்னேஸ்வரன் ஐயாவை நாங்களே கொண்டு வந்தோம்.
தமிழரசுக் கட்சி அவருக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதன் மூலம் தன் கட்சி ஒன்று தானே தன்னுடைய முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் நிகழ்வு வேறு எங்கும் நிகழ்ந்ததாக நான் அறியவில்லை.

தமிழரசுக் கட்சியானது தன்னுடைய மேலாண்மையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் பல பிழைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எந்தவிதமான குழப்பங்களும் இல்லையெனத் தெரிவித்ததுடன் அக்குற்றச்சாட்டை மறுப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்பதும்குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]