கூட்டமைப்பின் கூட்டத்திலிருந்து புளொட் தலைவர் வெளியேற்றம் – ஆசனப் பங்கீட்டில் அநீதியாம்

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான ஆசனப் பங்கீட்டில் புளொட் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து தற்போது இடம்பெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியேறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட சிகளுக்கு இடையேயான கூட்டம் யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் இன்றிரவு 7 மணி முதல் இடம்பெற்றுவருகிறது.

உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்திலும் தமிழ் அரசுக் கட்சிக்கு 60 சதவீதமும் ரெலோ, புளொட் கட்சிகளுக்கு தலா 20 சதவீதமும் ஆசன ஒதுக்கீடு வழங்கப்படும் என பங்காளிக் கட்சிகளின் தலைமைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாண மாநகர வட்டாரங்களின் அடிப்படையில் புளொட் கட்சிக்கு 2 வட்டாரங்கள் மாத்திரம் தமிழ் அரசுக் கட்சியால் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சிக்குச் சேர வேண்டிய மேலும் 3 வட்டாரங்கள் ரெலோவுக்கு வழங்கப்பட்டுள்ளது..

இதுதொடர்பில் இடம்பெற்ற பேச்சுக்கள் திருப்தியளிக்காத நிலையில் கூட்டத்திலிருந்து இன்றிரவு 9 மணியளவில் புளொட் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்தன் வெளியேறினார்.