கூட்­ட­மைப்­பின் ­மீது தமிழ் மக்கள் கொண்­டி­ருந்த நம்­பகத் தன்­மை­யினை அக்­கட்சி தகர்த்­துள்­ளது – பஷில் ராஜ­பக்ஷ

பஷில் ராஜ­பக்ஷ

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பின்­மீது தமிழ் மக்கள் கொண்­டி­ருந்த நம்­பகத் தன்­மை­யினை அக்­கட்சி தகர்த்­துள்­ளது. வடக்கு மக்­க­ளுக்கு அக்­கட்சி வழங்­கி­யி­ருந்த வாக்­கு­று­தி­களை கடந்த மூன்று ஆண்­டு­களில் நிறை­வேற்ற முடி­யாது போயுள்­ளது. அதனால் அக்­கட்சி வடக்கில் அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. எனவே ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் மீது இன­வாதச் சாயம் பூசி தமது அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்­பார்த்­துள்­ள­தாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு பத்­த­ர­முல்ல நெலும் மாவத்­தை­யி­லுள்ள அக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்­றது. அந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­விற்கு வடக்கில் நாம் எதிர்­பார்த்­த­தை­விட வர­வேற்பு உள்­ளது. தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு எமக்­கெ­தி­ராக முன்­னெ­டுக்கும் பிர­சா­ரங்கள் அனைத்தும் மக்கள் மத்­தியில் பொய்ப்­பித்­துள்­ளன. ஏனெனில் கடந்த மூன்று வரு­டங்­களில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் இணைந்தே வேலைத்­திட்­டங்­க­ளை முன்­னெ­டுத்து வந்­தது.

எனினும் குறித்த காலப்­ப­கு­தியில் வட க்கு மக்கள் எதிர்­பார்த்த விட­யங்கள் எத­னையும் நிறை­வேற்­றிக்கொள்ள முடி­யாது போயுள்­ளது. அம்­மக்கள் மூன்று பிர­தான விடயங்களை எதிர்­பார்க்­கின்­றனர். அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக தீர்வு பெறல், பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்றல், அப்­பி­ர­தேசத்தை அபி­வி­ருத்தி செய்தல் என்­ப­னவே அவை. எனினும் குறித்த விடயங்­களை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினால் நிறை­வேற்ற முடி­யாது போயுள்­ளன.

ஆகவே அக்­கட்­சி­மீது மக்கள் கொண்­டி­ருந்த நம்­பிக்கை இல்­லா­து­போ­யுள்­ளது. எனவே ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவை இன­வாதக் கட்­சி­யாக சித்­த­ரித்து அர­சியல் நடத்­து­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முற்­ப­டு­கி­றது. எனினும் எந்­தவொரு இன­வாத நோக்­கமும் எமக்­கில்லை. அத­னால்தான் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்டு ஒரு வரு­டத்­திற்­குள்­ளேயே நாம் வடக்கில் தேர்­தலில் போட்­டி­யி­டு­கிறோம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]