கூடுதலான அந்நியச்செலாவணியை பெற்றுத்தருபவர்களாக வெளிநாட்டு பணியாளர்கள் – பிரதமர்

வெளிநாடுகளில் பணிபுரியும் பணியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அபுதாபி கலந்துரையாடலின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.

Prime minister

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள அபுதாபி கலந்துரையாடலில் இரண்டு ஆண்டுகளுக்கான தலைவராக இதன்போது தெரிவுசெய்யப்பட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில் ,

இலங்கைக்கு கூடுதலான அந்நியசெலாவணி பெற்றுத்தருபவர்களாக இன்று வெளிநாட்டில் பணியாற்றும் பணியாளர்கள் மாறியிருப்பதாகவும் கூறினார். வெளிநாடுகளில் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவார். இவர்களின் குடும்ப பிரச்சினைகள் மற்றும் இவர்கள் நலன் தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும்முக்கியமாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Prime minister