பிரசவத்துக்கு காத்திருக்கும் தாய் நான்! – குஷ்பு

தமிழ், தெலுங்கு பட உலகை கலக்கியவர் குஷ்பு. பட தயாரிப்பு, அரசியல் என்று களம் இறங்கியுள்ள குஷ்பு சமீப காலமாக சினிமாவில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார்.

திரி விக்ரம் இயக்கத்தில் பவன்கல்யாண் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தின் பெயர் ‘அஞ்ஞாதவாசி’. இது பவன்கல்யாணின் 25-வது படம். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இதில், குஷ்பு பவன்கல்யாணின் வளர்ப்பு தாயாக நடித்திருக்கிறார்.

இன்று திரைக்கு வரும் இந்த படம் பற்றி கூறிய குஷ்பு….

“தெலுங்கு சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ‘அஞ்ஞாதவாசி’ படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படம் வெளியாவதை பிரசவத்துக்கு காத்திருக்கும் தாயின் மனநிலையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என் வயிற்றில் வண்ணத்து பூச்சி பறப்பது போன்று உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]