வசூல் குவிக்கும் நயன்தாராவின் திரைப்படங்கள்

வசூல் குவிக்கும் நயன்தாராவின் திரைப்படங்கள்

பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோக்களுக்கு நிகராக வளர்ந்துவிட்டார்.

அந்தவகையில், நயன்தாராவின் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான கோலமாவு கோகிலா மற்றும் இமைக்கா நொடிகள் படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது, அந்தவகையில், கோலமாவு கோகிலா ரூ 5 கோடி வரை சென்னையில் வசூல் செய்துவிட்டது.

அதேபோல் இமைக்கா நொடிகள் 3 நாட்களில் ரூ 1.4 கோடிகள் வரை சென்னையில் மட்டுமே வசூல் செய்துவிட்டது.

மேலும், நேற்று தமிழகம் முழுவதும் 70% திரையரங்குகளில் நயன்தாரா படங்கள் திரையிடப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]