குழந்தை அழுததால் ஆத்திரத்தில் சரமாறியாக கத்தியால் குத்திய தாய்

தாய் ஒருவர் காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தருணத்தில் குழந்தை அழுததால் ஆத்திரத்தில் சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த Adelina Khairnasova, நேற்று தன்னுடைய காதலன் மற்றும் பெண் தோழியுடன் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது மூவரும் மதுபோதையில் இருந்துள்ளனர். அவர்கள் மூவரும் இருந்த அறைக்கு பக்கத்து அறையில் Adelina வின் 8 மாத குழந்தை Tolik உறங்கி கொண்டிருந்தது.

இந்தநிலையில் கொஞ்ச நேரத்தில் Adelina தனது காதலனுடன் சண்டையிட ஆரம்பித்துள்ளார்.

அப்போது திடீரென உறக்கத்தில் இருந்து எழுந்த குழந்தை அழ ஆரம்பித்துள்ளது.

குழந்தையின் அழுகையில் எரிச்சலடைந்த Adelina, கத்தி ஒன்றினை எடுத்துக்கொண்டு குழந்தையின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த Adelina-வின் தோழி, உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவம் குறித்து மருத்துவனை நிர்வாகம் கூறுகையில்,

குழந்தை தற்போது தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆழமான காயங்கள் எதுவும் ஏற்படாததால், உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.

விரைவில் குழந்தை குணமடைந்துவிடும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட Adelina விடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், என்னுடைய காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் நான் ஏற்கனவே கோபமாக இருந்தேன்.

அப்போது குழந்தை அழுததால் எனக்கு இன்னும் கோபம் அதிகரித்துவிட்டது.

அந்த ஆத்திரத்தில் தான் அப்படி செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]