குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த நால்வர் கைது

குழந்தையை விற்பனை

பிறந்த குழந்தையை விற்க முயன்ற மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் ராகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொட பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

பிறந்து 15 நாட்களேயான அந்த குழந்தையை 02 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த குழந்தையின் தாய், பாட்டி, தாத்தா மற்றும் தரகர் பெண் ஆகியேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ராகம மற்றும் மஸ்கெலிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகி்ன்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]