குழந்தையை தாய்ப்போல் கவனித்துக்கொள்ளும் குரங்கு- இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே

குழந்தை ஒன்றை குரங்கு ஒன்று தாயின் இடத்தில் இருந்து கவனித்து வருகின்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீண்ட நாள் பழகியதை போல குரங்கும் குழந்தையும் விளையாடும் காட்சி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

குரங்கை பார்த்து குழந்தை ஒரு போதும் பயப்படவில்லை. குரங்கும் குழந்தையை கொஞ்சி விளையாடுவதிலும், அதற்கு உணவு ஊட்டுவதிலும், முத்தமிடுவதிலும், அவளை பராமரிப்பதிலும் பெற்ற தாயை போலவே இருக்கிறது.

இறுதியில், குரங்கும், குழந்தையும் உறங்க செல்லுகின்றனர். குழந்தை உறங்கும் தொட்டியில் குரங்கும் பாய்ந்து ஏறுகின்றது. கடைசி நிமிடத்தில் எதிர்ப்பாராமல் கீழ விழுந்து விடுகின்றது. இந்த காட்சி சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]