குழந்தையை அறைந்த பாதிரியார்- அதிர்ச்சி வீடியோ உள்ளே

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தேவாலயத்தில் பணியாற்றும் 89 வயது பாதிரியார், குழந்தையின் அழுகையை பொறுத்துக்கொள்ள முடியாமல் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் மிலன் நகருக்கு அருகில் உள்ள சாம்பியாக்ஸ் பகுதியில் உள்ளது கொலிசியேட் தேவாலயம். இந்த தேவாலயத்தில் 89 வயதான ஜாக்ஸ் லாக்ரோய்ஸ் பாதிரியாராக பணியாற்றி வந்தார்.

குழந்தையை அறைந்த பாதிரியார் :
பல்வேறு ஞானஸ்தானம், திருமணங்களை நடத்தி வைத்து மக்களிடம் நல்ல பெயரை பெற்றிருந்தார். ஆனால் நேற்று கைகுழந்தைக்கு ஞானஸ்தானம் பெற ஒரு பெற்றோர் தேவாலயத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

அப்போது குழந்தையை அந்த பாதிரியார் தூக்க முயன்றார். ஆனால் அப்போது அந்த குழந்தை அழுதுகொண்டிருந்தது. பெற்றோர்கள் அழுகையை நிறுத்த முயன்றும் முடியவில்லை. பாதிரியார் குழந்தையை அவர்களிடமிருந்து தூக்க முயன்றார், அப்போது மேலும் அதிகமாக அழ ஆரம்பிக்கவே, கோபமடைந்த பாதிரியார் குழந்தையின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இதை அங்கிருந்தவர்களையும்,பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த காட்சியை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபர் இதை சமூக வலைத்தளங்களில் போடவே, ஒரே நாளில் வைரலானது.

இதையடுத்து, தான் பொறுமை காத்திருக்க வேண்டும். கோபப்பட்டது தவறு. இனி நான் தேவாலய பணியை தொடரப்போவதில்லை என மன்னிப்பு கேட்டுள்ளார்.