குழந்தையின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த கொடூர தாய்!

தாயே குழந்தையின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்த சம்பவம் கரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த பரளி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா (24).  இவரின் கணவர் தங்கதுரை. இவர் திருச்சி மாவட்டம் கொளக்குடி பகுதியை சேர்ந்தவர்.

ஆனால் ரம்யா கணவனை வெறுத்து தனது கள்ளக்காதலன் மணிமாறன் உடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் வேதா வர்சினி.

ரம்யாவுக்கும் மணிமாறனுக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் மனமுடைந்த ரம்யா தனது மகள் வேதா வர்சினியை கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். மேலும் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இச்சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் ரம்யாவை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]