பாண்டிச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தைக்கு பாலுட்டுவது போன்ற டிபியை வைத்ததால், அதனால் ஆண்கள் என்ன சொன்னார்கள் என்பதைப் பற்றி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர் Breastfeeding Support for Indian Mothers என்ற முகநூல்பக்கத்தின் குரூப்பில் உள்ளார்.
இந்த முகநூல் பக்கம் தாய்மார்களின் சந்தேகங்களுக்குத்தீர்வு சொல்வதாகவும், அதுமட்டுமின்றி பாலூட்டும் அம்மாக்களுக்கு உதவி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த முகநூல் பக்கம் என்று ஆரம்பித்தார் பிரியதர்ஷினி.
தனக்குகுழந்தை பிறந்து மூன்று மாதம் இருக்கும் போது இந்த குரூப்பில் சேர்ந்தேன். அப்போது வெறும் 5,000 பேர் மட்டுமே உறுப்பினராக இருந்தனர். தற்போது இந்த குரூப்பில் 65,000 பேர் உறுப்பினராக உள்ளனர்.
சமீபத்தில்கிரஹலஷ்மி என்ற பத்திரிகையின் அட்டைப் படத்தில், குழந்தைக்குப் பாலூட்டுவது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது .
அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது போது அதற்கு எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இருந்து நிறைய ஆதரவு பெருகியது.
அந்த மொடல் மீது வழக்கு போடப்பட்டதால், எங்கள் குரூப்பில் குழந்தைகள் இருக்கும் அம்மாக்கள் எல்லாம், பொது இடத்தில் பாலூட்டுவதுபோல புகைப்படம் எடுத்து பேஸ்புக்கின் புரொபைல் பிக்சராக வைத்தார்கள். நானும் வைத்தேன்.
அவ்வளவு தான் அந்த புகைப்படத்தைக் கண்டதும் என்னுடைய நண்பர்கள் லிஸ்டில் இருந்த ஒருவர் என்னுடைய ஆம்பிளை புத்தி தப்பாக நினைத்துவிட்டது , மன்னித்துவிடுங்கள் என்று கூறினார்.
அதன் பின் சிலர் இதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததால் அவர்களிடம் நன்றி சொன்னேன். நன்றி சொன்னவுடன் அவர்களின் பேச்சு தப்பான பாதையில் செல்ல ஆரம்பித்தது, இதனால் நான் அவர்களை பிளாக் செய்துவிட்டதாக தெரிவித்தார்.
இந்த முகநூல் பக்கத்தில் தாய்மார்களின் சந்தேகங்களுக்குத்தீர்வு சொல்கிற முக்கியப் பொறுப்பில் பிரியதர்ஷினி உள்ளார்.
அவரின்கணவர் பிரியதர்ஷினியின் செயல்பாடுகளுக்குஉறுதுணையாக இருப்பதால், அவர் தன் உடம்பில் ஓர் அம்மா குழந்தைக்குப் பாலூட்டுவதுபோன்ற டாட்டூ போட்டுக்கொள்ளப் போவதாக மகிழ்ச்சியாககூறியுள்ளார் பிரியதர்ஷினி.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]