குழந்தைகளை நாகபாம்பிடம் இருந்து காப்பாற்றிய நாய் – நெகிழ்ச்சி சம்பவம்!

வீட்டுக்குள் நுழைய முற்பட்ட நாகப் பாம்பை தாக்கி கொலை செய்த நாய் ஒன்று, நாகம் பாம்பின் கடிக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தது.

நாயின் செயலால் வீட்டுக்குள் இருந்த இரு குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தம்புத்தேகமவில் நடந்துள்ளது. ஆறு வயது, ஒரு மாத குழந்தைகளை நாய் காப்பாற்றியுள்ளது.

சம்பவ தினத்தன்று குழந்தைகளின் தந்தை தொழில் நிமிர்த்தம் வெளியில் சென்றுள்ளார். குழந்தைகளும் தாயும் வீட்டில் இருந்துள்ளனர். இதன்போது வீட்டினுள் நாகப் பாம்பு ஒன்று நுழைய முற்பட்டுள்ளது.

என்ன செய்வது என்று அறியாது தாய் அச்சத்துடன் இருந்துள்ளார். வீட்டில் செல்லப் பிராணியாக வளர்த்த நாய், நாகப் பாம்பைக் குழந்தைகளிடம் நெருங்க விடாமல் தாக்கியுள்ளது. நாயின் தாக்குதலில் பாம்பு இறந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பிரதேச மக்கள், பாம்பின் கடிக்கு இலக்கான நாயை கால்நடை மருத்துவரிடம் கொண்டுச் சென்றனர். எனினும் நாய் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் வீட்டு உரிமையாளர் உட்பட பிரதேச மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]