குளிர்பானங்களுக்கு மீண்டும் வரி திட்டம் – சுகாதார அமைச்சர்

குளிர்பானங்களுக்கு மீண்டும் வரி திட்டம் – சுகாதார அமைச்சர்

சுகாதார அமைச்சர்நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து குடிபானங்களுக்கும் மீண்டும் வரிகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சீனியின் நிலைகள் தொடர்பில் ‘ட்ரெபிக் லைட் முறைமை’ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிக சீனியைக் கொண்ட குளிர்பானங்களுக்கு சிவப்பு நிறமும், நடுத்தரமான மட்டத்தில் சீனியைக் கொண்ட குளிர்பானங்களுக்கு செம்மஞ்சலும், குறைந்தளவில் சீனிகொண்ட குளிர்பானங்கள் பஞ்சை நிறத்திலும் அடையாளப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அதிக சீனியை கொண்ட குளிர்பானங்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை. 100 கிராம் கொண்ட குளிர்பானங்களுக்கு 6 கிராமுக்கும் அதிக அளவு சீனியை பயன்படுத்தினால் வரி அறவிடப்படும்.

இது தவிர எண்ணை மற்றும் உப்பு போன்றவற்றிட்கும் இந்த வரி முறைமை அமுல்ப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]